Questions? +1 (202) 335-3939 Login
Trusted News Since 1995
A service for global professionals · Tuesday, March 31, 2020 · 513,438,656 Articles · 3+ Million Readers

சர்வதேச விசாரணை தேவையில்லை, அரசுடன் பேசியே தீர்வைப் பெற முடியும் : இலங்கைத் தமிழரசுக் கட்சி துரைராஜசிங்கம் .

NEW YORK, NEW YORK, USA, February 28, 2020 /EINPresswire.com/ -- சர்வதேச விசாரணை தேவையில்லை, அரசுடன் பேசியே தீர்வைப் பெற முடியும் : இலங்கைத் தமிழரசுக் கட்சி துரைராஜசிங்கம்
.

Source Link:
http://valampurii.lk/valampurii/content.php?id=13963&ctype=news

ஆசிரியரின் குறிப்பு:
"இது சுமந்திரனின் யோசனை, ஆனால் சுமந்திரன் வெவ்வேறு நபர்களைப் பயன்படுத்தி தனது கருத்துக்களையும் சிந்தனையையும் வெவ்வேறு நபர்கள் மூலம் பரப்புகிறார். இந்த முறை சுமந்திரன் செயலாளர் துரராஜசிங்கத்தைப் பயன்படுத்துகிறார்.

இந்த கட்டுரையை வாலம்புரி செய்தித்தாள் 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. இது அவரது அசல் மற்றும் பொதுவான சிந்தனை. ஆனால், தேர்தல் காரணமாக அவர் தமிழர்களிடம் பொய் சொல்லி தனது அறிக்கையை மாற்றியமைப்பார்.

சுமந்திரனின் கருத்தை தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.

இந்த சிந்தனை சிங்கள போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது."


2017-03-28 அன்று வலம்புரி எழுதிய கட்டுரை இங்கே:

மூன்றாவது தரப்பால் பிரச்சினைகள் தீராது. அரசுடன் பேசியே தீர்வைப் பெற முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை தேவை. எமது விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும். சர்வதேச அழுத்தம் இருந்தால் மட்டுமே இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றெல்லாம் தமிழ் மக்கள் குரல் எழுப்பி நிற்கையில்,

தமிழினத்துக்கு துரோகம் செய்வது போல தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம்; சர்வதேசத் தலையீடு தேவையில்லை. நாங்கள் அரசுடன் பேசியே பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளார் எனில்,

இவருக்கும் கருணா அம்மானுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கேட்பதை விட வேறு வழிதெரியவில்லை.

அரசுடன் பேசியே பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று துரைராஜசிங்கம் இப்போது கூறுவதை கருணா அம்மான் சற்று முன் கூட்டியே செய்துள்ளார் என்று கூறுவதில் என்ன தவறுண்டு?

தமிழினம் அழிவதற்கும் பல்லாயிரக்கணக் கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் கருணா அம்மான் காரணம் என்று தமிழ் உலகம் குறை கூறுகிறது.

ஆனால் கருணா அம்மானின் அதேநிலைப்பாட்டை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த துரைராஜசிங்கம் செய்கிறார் என்றால்,

விடுதலைப் புலிகளில் இருந்து விலகி இலங்கை அரசாங்கத்துடனும் இலங்கைப் படையினருடனும் கருணா அம்மான் இணைந்து செயற்படுவதற்கு மேற்குறிப்பிட்ட நபர்களின் சிந்தனைகளும் கருத்துக்களுமே காரணமாக இருந்துள்ளன என்று எண்ணுவதில் தவறில்லை.

இலங்கை அரசாங்கத்துடன் பேசித் தீர்க்கலாம் என்றால், இதுவரை காலத்தில் என்ன பேசித்தீர்த்தீர்கள்.
வருடக்கணக்கில் சிறைகளில்வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடிந்ததா?

காணாமல்போனவர்களின் உறவுகள் இன்று வரை அழுது புலம்பி அந்தரிக்கும் அவல வாழ்வுக்கு முடிவு கிடைத்ததா?

தமது சொந்த மண்ணில் குடியமர ஏங்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்குத் தீர்வுதான் காணப்பட்டதா? எதுவும் இல்லாத போது அரசுடன் பேசுவதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும். மூன்றாவது தரப்பால் பிரச்சினை தீர்க்க இயலாது என்று நாக்கூசாமல் சொல்லுகின்ற படுதுரோகத்தனத்தை பார்த்திருக்கும் பரிதாபத்திலேயே தமிழ் மக்கள் இப்போது இருக்கின்றனர்.

சம்பந்தனைப் புகழ்வது தேவையென்றால் புகழுங்கள். அவசியமாயின் அவர் முன் அட்டாங்க நமஸ்காரம் செய்யுங்கள். இது உங்களின் சீவியத்துக்கு ஆதாரமாக இருக்கும்.

இதைவிடுத்து சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்துகின்ற வேளையில் அதற்கு நாசம் விளைவிக்கும் வகையில் கருத்துரைப்பதைத் தயவுசெய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நான்கு பிள்ளைகள், மூன்று பிள்ளைகள், இரண்டு பிள்ளைகள் என்று போரில் பலிகொடுத்து வயிற்றில் நெருப்பைக் கட்டி வாழும் வயோதிபப் பெற்றோர்களின் மனநிலையை இம்மியும் உணர்ந்து கொள்ள முடியாத பிரகிருதிகள் மத்தியில் எங்கள் தமிழினம் எப்படித் தப்பிப் பிழைக்கப் போகிறது?

ஆ! கடவுளே அரசுடன் பேச்சு நடத்தி தங்களுக்கு வாகனம் பெற்றதை, வாகனத்துக்கான அனுமதிப்பத்திரம் கிடைத்ததை நல்லாட்சி நல்லது செய்கிறது என்று கூறுவோரை என்ன செய்வோம் இறைவா!
தந்தை செல்வாவின் வார்த்தையைத் தவிர வேறேதுமில்லை என்பதே உண்மை.

www.Tamildiasporanews.com

Editor
Tamil Diaspora News
914 713 4440
email us here

Powered by EIN Presswire


EIN Presswire does not exercise editorial control over third-party content provided, uploaded, published, or distributed by users of EIN Presswire. We are a distributor, not a publisher, of 3rd party content. Such content may contain the views, opinions, statements, offers, and other material of the respective users, suppliers, participants, or authors.

Submit your press release