There were 1,789 press releases posted in the last 24 hours and 398,963 in the last 365 days.

காணாமல் போனோரின் தாய்மாரின் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முழு ஆதரவு!

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஒரேவழி மீண்டும் இலங்கைக்கு காலக்கெடு கொடுக்காமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துவது அவசியம்.

NEW YORK, UNITED STATES OF AMERICA, February 24, 2019 /EINPresswire.com/ --

எதிர் வரும் 25ம் திகதி கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் தாய்மார்களால் மேற்கொள்ளப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கும் வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முழுக்கதவடைப்புப் போராட்டத்திற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதோடு ஒட்டு மொத்த தமிழீழ மக்களையும் முழு ஆதரவு வழங்குமாறு கோருகிறது.

தாய்மாரின் இந்தப் போராட்டத்திற்கு உலகின் பல்வேறு நகரங்களில் 25ம் திகதி நடத்தப்படும் ஆதரவுப் போராட்டத்திற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முழு ஆதரவையும் வழங்குகிறது.

இலங்கையின் இணைஅனுசரணையுடன் 2015 இல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் 30/1 இல் கூறப்பட்ட விடயங்களை நிறைவேற்றாமல் மேலும் இரண்டு வருட கால நீடிப்பை பெற்று நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் 34/1 இல் கூறப்பட்ட விடயங்களையும் நிறைவேற்றாமல் இலங்கை தமிழ்மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி மேலும் கால நீடிப்பை எதிர்பார்த்து இழுத்தடிப்புச் செய்கிறது. இதற்கு இடமளிக்காது இலங்கையின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டி எம்மக்களின் விடிவுக்கு வழிசமைக்க எம்மக்கள் யாவரும் ஒன்றிணைந்து போராடுவது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஒரேவழி மீண்டும் இலங்கைக்கு காலக்கெடு கொடுக்காமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court - ICC) பாரப்படுத்துவது அவசியம்.

இந்தப்போராட்டத்திற்கு பேராதரவு வழங்க முன்வந்துள்ள தமிழ் பொதுமக்கள், மதகுருமார்கள், மக்கள் சமூக அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் அமைப்புக்கள், வணிகப்பெருமக்கள் ஆகியோர்களின் கரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையுடன் பற்றிக்கொள்கிறது.

இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter: @TGTE_PMO

Email: r.thave@tgte.org
Web: www.tgte.org

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
email us here