There were 1,473 press releases posted in the last 24 hours and 400,702 in the last 365 days.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் : சர்வதேசத்துக்கு சிறிலங்கா விடுக்கும் சவாலா ? - சுதன்ராஜ்

PARIS, FRANCE, January 16, 2019 /EINPresswire.com/ --

'போர்குற்றவாளியென குற்றஞ்சாட்டப்பட்டவர், சிறிலங்காவின் இராணுவ அதிகாரியாக நியமனம்' ' வன்னியில் இருந்து சர்வதேச பிரசன்னத்தை வெளியேற்றிவிட்டு ருவண்டா போல் திட்டமிட்ட இனவழிப்பை செய்யவர்' இவைகளே அனைத்துலக ஊடகமான அல்-ஜெசீரா உள்ளடங்க பல சர்வதேச செய்தி நிறுவனங்களிலும், கண்டனக்குரல்களிலும் வெளியிட்டுள்ள செய்திகளாகும்.

பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களினாலும், ஐ.நாவின் பல்வேறு அறிக்கைகளிலும் இலங்கையின் இறுதிப்போரின் போர்குற்றவாளியென இனங்காணப்பட்ட அல்ல குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினை, இராணுவத் தலைமை அதிகாரியாக சிறிலங்கா அரசபீடம் நியமனம் செய்திருப்பதானாது, அனைத்துலக அரங்கில் சிறிலங்கா தொடர்பில் பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.

சிறிலங்காவின் நல்லாட்சி நாயகர் என விழிக்கப்பட்ட மைத்திரபால சிறிசேனாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்ட மறுகணத்தில் இருந்தே, இவ்விவகாரத்தில் கண்டனக்குரல்கள் அனைத்துலக அரங்கில் இருந்து கேட்கத் தொடங்கியுள்ளன.

இறுதிப்போரில் நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கும், போர் குற்றச்சாட்டுக்களுக்கும் பொறுப்புகூற வேண்டிய இடத்தில் இருக்கின்ற சிறிலங்காவின் அரசபீடம், அக்குற்றங்களோடு தொடர்புடையவராக கருதப்படுகின்ற ஒருவருக்கு உயர்பதவி கொடுத்திருப்பதானது, அதன் இனவாத முகத்தை உலகிறகு மீளவும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக கருதப்படுகின்றது.

நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் பொறுப்புக்கூறல், இனநல்லிணக்கம் என்பவற்றின் செயற்பாட்டில, சிறிலங்காவின் 'பொறுப்பு' மீளவும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

1984ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கைத்தீவின் போரில் முக்கிய பங்காற்றியிருந்தவர். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த இவர், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவாக காணப்பட்ட 53வது டிவிசனின் வான்வழி நகர்வுப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

இறுதிக்கட்டப் போரில், கொமாண்டோ பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாகவும், 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்ட இவர், மன்னார் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான போரில் முழுமையாகப் பங்கெடுத்தவர்.

இலங்கைத்தீவின் இறுதிக்கட்டப் போரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் பொறுப்பாளர்கள், தளபதிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இவருக்கும் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் சர்வதேச அரங்கில் காணப்படுகின்றன.

போர் முடிந்த பின்னர், 2010ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரை ஐ.நாவுக்கான துணைத் தூதுவராகப் பணியாற்றிய இவருக்கு எதிரான வழக்கு ஒன்று, அமெரிக்காவின் நியூ யோர்க் நீதிமன்றத்தில் தொடுக்கப்படிருந்தது. பின்னர் நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் மீளழைக்கபட்டிருந்தார்.

இதுவே மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடந்தகால வழித்தடமாக உள்ளது.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், எவ்விதமான முக்கியமான பொறுப்புக்களில் இருந்தும்டி ஒதுக்கி அல்லது மறைத்து வைக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீளவும் இராணுவ உயர்பதவிக்கு நியமனம் செய்திருப்பதான் ஊடாக சிறிலங்கா அரசு, சர்வதேசத்துக்கு சொல்ல வரும் சேதி என்ன ?

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ள 2 ஆண்டு கால அவகாசம் எதிர்வரும் மார்ச்சுடன் நிறைவுற உள்ள நிலையில், சிறிலங்கா அரச பீடத்தின் அதிரடியான இந்த நியமனம் என்பது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முக்கியத்துவம் உள்ள ஒன்றாகவே காணப்படுகின்றது.

சிறிலங்காவில் பிரதமர் ரணிலுக்கும், அதிபர் மைத்திருக்குமான முரண்பாட்டின் ஒர் பகுதியாக இவரது நியமனம் அமைந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் காணப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச சக்திகள் என வகூறப்படுகின்ற மேற்குலகததுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கின்ற ரணிலுக்கு, சர்வதேச அரங்கில் ஓர் நெருக்கடியினை கொடுப்பதற்கு இந்த நியமனத்தை அதிபர் செய்திருக்கலாம் என்ற அரசியல் பிற்காரணிகளும் சொல்லப்படுகின்றன.

எதுவாயினும் சிறிலங்காவின் இனநாயக முகத்தையே மீண்டும் மீண்டும் இவைகள் வெளிச்சம் போட்டுகாட்டுபவையாக உள்ளன என்பதையே இந்நியடனம் தொடர்பில் வெளிவரத் தொடங்கியுள்ள கண்டனக்குரல்கள் உணர்த்துகின்றன.

(International Truth and Justice Project)) உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்ட சர்வதேச அமைப்பின் பிரதிநிதி ஜஸ்மின் சொக்கா அவர்கள்; தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

போர் குற்றங்கள் தொடர்பில் மேஜர் ஜெனரல் சில்வா மையப்படுத்தி கணிசமான சாட்சியங்களை ஆவணப்படுத்தியுள்னோம் எனத் தெரிவித்துள்ள ஜஸ்மின் சொக்கா , அதனை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றங்களுக்காக அவரைக் குற்றஞ்சாட்டுவதற்கு போதுமான சான்றுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரது நியமனம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை இழிவுபடுத்தும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள ஜஸ்மின் சொக்கா, இலங்கையில் எந்த நல்லிணக்க முயற்சியையும் இது பாதிக்கும்' எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னராக சிறிலங்காவின் அரசியல் அரங்கில் மீளவும் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற விவகாரத்திலும் இவ்வாறான கண்டனக்குரல்கள் எழுந்திருந்தன.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைச்சபைத் தீர்மானத்தில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவுறும் நிலையில், போர்குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ளவர்களை பாதுகாக்கும் ஓர் நடவடிக்கைவே அதிபர் மைத்திரியின் இந்த நியமனங்கள் அமைந்திருக்கின்றன என்ற சந்தேகவும் வலுவாக காணப்படுகின்றது.

காரணம் தமிழர்களுக்கு எதிரான போரில் பங்கெடுத்த இராணுவத்தினரை தேசத்தின் நாயகர்களாவே சிறிலங்கா அரசு கொண்டாடுகின்றது. அவர்களுக்கான சலுகைகளை வழங்குவதோடு, அவர்களை தண்டிக்கவோ அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தவோ அது தயார் இல்லை என்பதனைத்தான் சிறிலங்கா அரசியல் தலைவர்களது கருத்துக்கள் தொடர்சியாக வெளிக்காட்டி நிற்கின்றன.

போர் வீரர்களாக தனது இராணுவத்தினைக் கருதும் சிறிலங்கா அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையிலேயே செயற்படுகின்றது என்பதும் பல்வேறு கட்டங்களில் வெளிப்பட்டு நிற்கின்றது.


இதனையே மேஜர் ஜெனரல் சில்வாவின் நியமனமும் காணப்படுகின்றது.

அமெரிக்காவின் நியூ யோர்க் நீதிமன்றத்தில் தன்மீது தொடுக்கப்பட்டுள்ள வழங்கின் பின்னாhல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரனே உள்ளார் என்ற குற்றச்சாட்டை மேஜர் ஜெனரல் சில்வா முன்னர் தெரிவித்திருந்தார்.

தற்போது மேஜர் ஜெனரல் சில்வாவின் நியமனம் தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள வி.உருத்திரகுமாரன், 'தமிழர்களுக்கு எதிரான கடந்த 26 வருசப் போரில் 2 இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதிலும், பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதிலும் முக்கிய பங்கு வகித்தவர் மேஜர் ஜெனரல் சில்வா.

குறிப்பாக இறுதிக்கட்ட போரில் வன்னயில் இருந்து சர்வதேச பிரசன்னத்தை இல்லாது செய்வும் வகையில் அவர்களை வெளியேற்றிவிட்டு, திட்டமிட்ட வகையில் தமிழினப்படுகொலையினை செயததில் முக்கியமானவர். இதுதான் ருவண்டா றுவண்டா இனப்படுகொலையிலும் இடம்பெற்றது.

இவர் கட்டளை அதிகாரியாக இருந்த 58வது டிவிசன் மீது, படுகொலைகள், பாலியல் வன்முறைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் என சர்வதேச குற்றங்கள் ஐ.நாவின் அறிக்கைகளிலும், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளிலும் வெளிப்பட்டுள்ளன.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என சிறிலங்கா அரசு, சமீபத்தில் நிறுவிய அலுவலகம் என்பது சர்வதேசத்தை ஏமாற்றுகின்ற ஒரு கண்டுதுடைப்பு நாடகம் என்பதனை இவரது நிமயனம் வெளிப்படுத்துகின்றது.

தமிழர் தாயகத்தில் இராணுவ பிரசன்னம் இன்னமும் நீடித்தும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது நியமனம் என்பது தமிழர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

சிறிலங்கா அரசுக்கு 2 ஆண்டுகால அவகாசம் ஐ.நாவில் வழங்கப்பட்டமையானது ஒரு முட்டாள் தனமான செயற்பாடு என்பதும் தெளிவாகின்றது. இந்நிலையில் மேலும் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குகின்ற என்ற கருத்துக்கே இடமின்றி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை பாரப்படுத்துவதே ஒரே வழி' எனத் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தினைத்தான் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி திருச்சோதி அவர்களும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேஜர் ஜெனரல் சில்வாவின் நியமனம் என்பது சிறிலங்கா அரசு எந்த வித நல்லிணக்கத்துக்கும் தயார் இல்லை என்பதனையே சுட்டிக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ள திரு;சோதி, 'நாம் தமிழ் பிரதேசத்தை கைப்பற்ற போர் நிகழ்த்தவில்லை, கணக்கில்லாமல் படுகொலைகள் செய்யவே நான் போரிட்டோம் ' சர்வேந்திரா சில்வா தனது முகநூலில் பதிவிட்ட கருத்தினை நினைவூட்டியுள்ளார்.

இந்த நியமனம் மூலம் ஐ.நாமனிதவுரிமை பிரேரனை 30-1, 34-1 தீர்மானங்களை சிறிலங்கா அரசு மதிக்கப்போவது இல்லை என்;ற அவர்களது அடிப்படை நோக்கம் என்று தெளிவாக தெரிகின்ற நிலையில், இந்த பிரேரணையை கூட்டாக முன்மொழிந்து கையெழுத்து இட்ட நாடுகள் தமது நிலை பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார். வெறுமனே மனிதவுரிமை சபையில் இருந்து கொண்டு, தமிழ் இனப்படுகொலை தொடர்ச்சியாக நடப்பதை பார்வையாளர்களாக பார்த்துக்கொண்டு இருக்காமல் சர்வதேச நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை கொண்டு செல்வத்துக்கான வழிவகைகளை சர்வதேச சமூகம் செய்து ஆகவேண்டும் எனவும் திருச்சோதி குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் குற்றங்கள் நிகழாமல் இருக்க போர்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் புரிய உத்தரவிட்ட மேலிடத்தவர்கள் தண்டிக்கப்படுதல் அவசியம் என்பது சர்வதேசத்தில் மனித உரிமைக்கான குரல்களாக இருக்கின்றது.

ஆனால் இந்தக்குரல்களை கேட்காத வகையில் சிறிலங்காவின் காதுகளை அதன் இனநாயகம் மறைக்கின்றது என்பதுதான் உண்மை.

சுதன்ராஜ்
Suthanraj
+33 7-5516-8341
email us here